என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் படை அத்துமீறல்"

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறி தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். #JammuKashmir #KupwaraViolation
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டார் பகுதியில் இந்திய ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மச்சில் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

    பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #JammuKashmir #KupwaraViolation
    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். #JammuKashmir #PakistanViolates #ArmyJawanMartyred
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனாலும் இந்த தாக்குதலில் மணிப்பூரை சேர்ந்த ராணுவ வீரர் பிகாஸ் குருங் (21), என்பவர் வீர மரணம் அடைந்தார்.

    பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் தாக்குதலை தொடர்ந்து நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    #JammuKashmir #PakistanViolates #ArmyJawanMartyred
    ×